அடுப்பே இல்லாமல் ஆந்திரா பாணியில் மிளகாய் சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே எல்லோருக்கும் அவசர பசி வருவது வழக்கம். வீட்டில் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாத நேரங்களில் ஏற்படும் குட்டி பசியின் தாக்கத்தை அனைவருமே வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவித்திருக்க கூடும்.
அப்படிப்பட்ட நேரங்களில் சாதத்துக்கு அட்டகாசமான சுவையை கொடுக்கும் ஆந்திரா மிளகாய் சட்னியை அடுப்பே பயன்படுத்தாது வெறும் 5 நிமிடங்களில் எப்ப செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 10 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 25
உப்பு - சுவைக்கேற்ப
வெல்லம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் 6 பச்சை மிளகாய் அல்லது காரத்திற்கு ஏற்ப மிளகாய் , பூண்டு பற்கள், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.சின்ன வெங்காயம் இல்லாத போது , 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
பின்னர் அதனுடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால், சுவையான ஆந்திரா மிளகாய் சட்னி வெறும் 5 நிமிடங்களில் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |