ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப் பட்டியலில் நிச்சயம் சிக்கன் முக்கியம் இடத்தை பெற்றிருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி உண்ணக்கூடிய சிக்கனை பல்வேறு வகைகளிலும் அசத்தலாக சமைக்கலாம்.
சற்று வித்தியாசமான முறையில் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - தேவையான அளவு
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 1
கருவேப்பிலை - சிறிதளவு
கரம் மசாலா - ½ தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மேரினேட் செய்ய தேவையானவை
சிக்கன் (எலும்புடன்) - 600 கிராம்
மஞ்சள்தூள் - ½ தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 10
புதினா - 2 கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலைகள் - 2 கைப்பிடி அளவு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
ஏலக்காய் - 2
செய்முறை
முதலில் சிக்கனை நன்றான சுத்தம் செய்து இரண்டு முறை கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அலசிவிட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதினையடுத்து , சிக்கனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு குறைந்தது ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.
பின்னர் வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து, பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
அதுபோல் இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரித்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மெரினெட் செய்து வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்களுக்கு பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,சிக்கன் நன்றாக வெந்து மசாலா சுருண்டு வெந்து வரும் வரையில் வேகவிட வேண்டும்.
இறுதியில் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான பச்சை மிளகாய் சில்லி சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |