Sunday special: ஆந்திரா பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... எப்படி செய்வது?
பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் அலுவலக தொழில் புரியும் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக வித்தியாசமான முறையில் சமையல் செய்து சாப்பிட வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள்.
அசைவ பிரியர்கள் என்றால் அதிகமாகவர்கள் விரும்புவது சிக்கன் தான். அப்படி சிக்கனை வழக்கமான முறையில் இல்லாமல் ஆந்தரா பாணியில் நாவூரும் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
எண்ணெய் - 1 தே.கரண்டி
சோம்பு - 2 தே.கரண்டி
இலவங்கப்பட்டை - 1 துண்டு
சீரகம் - 1 தே.கரண்டி
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1தே.கரண்டி
மல்லித்தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
சீரகப் பொடி - 1 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி
உப்பு -தேவைக்கேற்ப
வெண்ணெய் - 2தே.கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகாக வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மசாலாப்பொடிகள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கைகளால் கலந்து விட்டு 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மசாலாவில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடங்கள் வரையில் பாத்திரத்தை மூடி வேகவிட வேண்டும்.
இறுதியில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆந்திரா சிக்கன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |