கசப்பே இல்லாத ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் பூண்டு மசாலா - ரெசிபி இதோ
பாகற்காய் நம்மில் பலருக்கும் பிடிக்காது. நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால், அதில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
அதிக பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு சுவை. சிலருக்கு கசப்பு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது.
பாகற்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு காய்கறி, இது அதிக அளவு நார்ச்சத்து, இதில் வைட்டமின்-சி, வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் கே, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன.
தேவையான பொருட்கள்
- பாகற்காய் -2
- பூண்டு - 10-12 பல்
- புளி - சிறிதளவு
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- மிளகாய் தூள் - 1-2 டீஸ்பூன்
- கொத்தமல்லி விதைகள் - சிறிதளவு
- பெருங்காயம் தூள் - சிறிதளவு
- கடலைப்பருப்பு - சிறிதளவு
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் பாகற்காயை மெல்லியதாக நறுக்கி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, தனியா, சீரகம் சேர்த்து 10 நிமிடம் வரை நன்றாக வறுக்கவும்.
அடுத்து அதில் பூண்டு, புளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அவற்றின் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருந்த பாகற்காயை சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கவும். அவ்வளவு தான் இப்போது பாகற்காய் பூண்டு மசாலா வறுவல் தயார்.
இதனை சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |