திடீரென கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்- அள்ளிக் கொண்டு போன மக்கள்
விசாகப்பட்டினத்தில் திடீரென கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்
கடந்த சில நாட்களாக ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், விசாகப்பட்டினம், ஆர்கே கடற்கரையில் நேற்று காலை திடீரென லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கின.
இதைப் பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து பைகளில் கொத்து கொத்தாக மீன்களை அள்ளி வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
ஆக்சிஜன் குறைவதால் அல்லது வெப்ப அலையால் இதுபோல் திடீரென மீன்கள் கரை ஒதுங்கியதா அல்லது ஏதாவது இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் ஒரு வாரம் மேலாக பகல்நேர வெப்பநிலை 36 டிகிரிக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்சடின்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Millions of fish washing ashore right from this morning in R K beach, Visakhapatnam. A phenomenon triggered by depletion of oxygen or heatwave, people had a rich harvest of fish right on the beach sands. The day temperatures are below 36 degrees for over a week. pic.twitter.com/WisUhn1MR4
— Chandra Bhaskar Rao (@chandrabhaskar) May 29, 2023