பசி உணர்வை சுண்டியிழுக்கும் ஆந்திரா இஞ்சி சட்னி- 10 நிமிஷத்தில் செய்யலாம்..
பொதுவாக இந்தியர்கள் காலையில் இட்லி அல்லது தோசையை தான் காலையுணவாக எடுத்து கொள்வார்கள்.
தினமும் இட்லி அல்லது தோசை சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் வெவ்வேறு வகையான சட்னி செய்து சாப்பிடலாம்.
தமிழ்நாட்டு சட்னிகள் சாப்பிட்டு போரடித்தவர்கள் மற்ற மாநில சட்னிகளை முயற்சித்து பார்க்கலாம். அப்படியாயின் சுவையும், ஆரோக்கியமும் அதிகமாக தரும் ஆந்திரா சட்னி செய்து சாப்பிடலாம். வழக்கமாக ஆந்திர உணவுகள் என்றாலே காரமாகத் தான் இருக்கும்.
இது இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் இஞ்சி சட்னி அல்லது அல்லம் சட்னி செய்து கொடுத்தால் வீட்டிலுள்ள அனைவருக்கும் உங்கள் சமையல் மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில், ஆந்திரா ஸ்பெஷல் இஞ்சி சட்னி எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- நறுக்கிய இஞ்சி - அரை கப்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய் - 5
- சீரகம் -1 ஸ்பூன்
- மல்லி விதை - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புளி - சிறிதளவு
- வெல்லம் - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- கடுகு - அரை ஸ்பூன்
- கடலைப் பருப்பு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய் - 1 பொடியாக நறுக்கிய
- பூண்டு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
ரெசிபி
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
அதன் பின்னர் சிவப்பு மிளகாய், சீரகம், மல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் புளி ஆகியவற்றை நன்றாக போட்டு கிளறி விடவும்.
3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதனுடன் வெல்லம், உப்பு, தண்ணீர் ஆகிய பொருட்களை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும். அம்மியில் அரைக்கலாம்.
இதனை தொடர்ந்து சட்னிக்கு தாளிப்பு சேர்த்து கொஞ்சம் மிதமாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான சட்னி தயார்.
இதனை இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம். சூடான சாதத்திற்கும் நன்றாக இருக்கும். அத்துடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வாரம் கூட வைத்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |