1 நாளில் 2 கிலோ எடை குறைக்கணுமா? அப்போ VJ ரம்யா கூறும் டிப்ஸை கேளுங்க
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா சுப்ரமணியன் உடல் எடை குறைப்பிற்கான வழிமுறைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரம்யா சுப்ரமணியன்
இவர் சுமார் 15 ஆண்டகள் தொகுப்பாளினியாக தமிழ் தொலைக்காட்சிகளில் கடைமையாற்றி வருகிறார். இது மட்டுமல்லாமல் இவர் தற்போது திரைப்படங்களிலும் தனக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரின் தற்போதய வயது 37 ஆகும். ரம்யாவிற்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. திருமணம் நடைப்பெற்ற ஒராண்டிலேயே இவருக்கு விவாகரத்தும் ஆனது.
இந்த நிலையில் ரம்யா 1 நாளில் 2 கிலோ எடையை குறைப்பது எப்படி என்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் இதற்கான டயட் ப்ளானை பேசியிருக்கிறார்.
அவர் பேசும் போது 'நமது உடலில் 60 விழுக்காடுகளுக்கும் மேல் தண்ணீர் உள்ளது நாம் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொண்டால் தண்ணீர் குறைவாக இருக்கும் இதனால், நீர் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
நாம் நிறைய தண்ணீர் குடித்தால் அது ஒரு நாளைக்கு 2 கிலோ அளவை நமது உடலில் இருந்து குறைக்கும்' என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |