நம்ம மா கா பா ஆனந்திற்கு அவர் உயரத்தில் மகளா... மொத்த குடும்பத்தையும் பார்த்து இருக்கீங்களா?
நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் மாகாபா ஆனந்தின் குடும்ப புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளது.
மாகாபா ஆனந்த்
ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த மாகாபா ஆனந்த். ரேடியோ மிர்ச்சியில் 6 ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறார். அதன் பின் தொலைக்காட்சி பிரபலங்களை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.
அவ்வாறு வளர்ச்சியடைத்து விஜய் தொலைக்காட்சியில் அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறக்கிறார்.
இவரின் பேச்சு மக்களை கவர தொடர்ந்து சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் டி20, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸஸ் சின்னத்திரை, மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ், தி வால், முரட்டு சிங்கிள்ஸ், ராமர் வீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
வெறும் தொகுப்பாளராக மட்டுமில்லாது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம் தான் வானவராயன் வல்லவராயன் இத்திரைப்படம் நடித்து முடித்த பிறகு அடுத்து சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
மேலும் மாகாபா ஆனந்த் சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்களின் குடும்ப புகைப்படம் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |