முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி கிகி... வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கிகி தற்போது ட்ரெண்டிங் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினி கிகி
பிரபல தொகுப்பாளினி கிகி விஜயின் முழுப்பெயர் கீர்த்தனா. இவரை செல்லமாக கிகி என்று அழைக்கின்றனர். தற்போது அதுவே அவருக்கு பெயராக மாறிவிட்டது.
இவர் மாடல், நடிகை என நிறைய விஷயங்களில் ஈடுபாடு காட்டி அசத்தி வருகிறார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
அதன்பின், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக தற்போது வலம் வருகிறார். இவர் நடிகரும் பிரபல இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இருவரும் “டான்ஸ் அகாடமி” ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை இவ்லை என்ற விடயம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியதால் அண்மையில் கிகி தொடர்பான விடயங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் சமூக வலையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிகி, நீல நிற ட்ரெண்டிங் ஆடையில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |