பிரபல தொகுப்பாளினியின் பரிதாப நிலை! கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் டிடி
நடிகை டிடி கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தொகுப்பாளனி என்றாலே நினைவுக்கு வரும் முதல் நபராக இருந்து வரும் டிடி இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.
இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் இருந்து வருகின்றார்.
டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் மூன்று வருடங்களே ஆன நிலையில், அவரை 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார்.

கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் டிடி
காதல் கணவருடன் விவாகரத்துக்கு பின்பு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இரந்து வரும் டிடிக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர்.
அதே போல Travel பிரியரான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதுடன் அங்கிருந்து ரசிகர்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தின் நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கியதுடன், விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவை டிடி மற்றும் அர்ச்சனா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக டிடி மேடைக்கு நடந்து வரும்போது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்திருக்கிறார். இது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டிடி-க்கு சமீப காலமாக காலில் சிறு பிரச்சினை இருந்து வருவதால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அந்த பிரச்சினையை ஒரு பக்கம் வைத்துவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
