41 வயதில் 20 வயது பெண்ணாக தொகுப்பாளினி டிடி.... வெளியிட்ட அசத்தல் புகைப்படம்
தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் தான் டிடி. சிறுவயதில் பேசவே கஷ்டப்பட்ட டிடி இப்படியொரு தொகுப்பாளினியாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கலகலப்பான பேச்சால் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வந்ததுடன், படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவர் தனது சிறுவயது நண்பராக ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார்.
தனியாக வாழ்ந்து வந்த இவர், உடல் அளவில் பல சிக்கல்களை சந்தித்து, தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்துள்ளார்.

வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் டிடி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்போதும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் நிறைய ஆசை இருக்கு என்ற கேப்ஷனுடன் கருப்பு நிற பேண்ட், டீசர்ட் அணிந்து அட்டகாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
தற்போது 41 வயதாகும் டிடி இன்னும் இளமையுடன் 20 வயது பெண் போன்று காணப்படுகின்றார். குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |