அச்சு அசல் இஸ்லாமிய பெண்ணாகவே மாறிய டிடி! வாயடைத்துப் போன ரசிகர்கள்
அச்சு அசல் இஸ்லாமிய பெண்ணாகவே மாறி பிரபல தொகுப்பாளினி டிடி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அசத்தல் காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவரது நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு பெறும். காரணம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் அழகாக கலகலப்பாக கொண்டு செல்வார்.
விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.

இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான்.இந்த நிகழ்ச்சி அவரின் அடையாளமாவே மாறியது.
சின்னத்திரையில் மாத்திரமன்றி வெள்ளித்திரையிலும், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் என ஒரு ரவுண்டு வந்தார்.

சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை டிடி நிரூபித்து வருகின்றார்.

40 வயதிலும் குறையாத அழகுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் தொகுப்பாளினி டிடி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்லாமிய பெண்ணை போல் உடையணிந்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |