என்னமா ஆடுறாங்க.. நீண்ட நாளைக்கு பிறகு குத்தாட்டம் போடும் டிடி! வைரலாகும் காட்சி
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆங்கில பாடலுக்கு ஆட்டம் போடும் டிடியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளர் பயணம்
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி.
இவரின் தொகுப்பாளர் பயணத்தை 20 வருடங்களாக தொடர்ந்து வருகிறார். இவரின் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.
தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.
ஆங்கில பாடலுக்கு குத்தாட்டம்
இந்த நிலையில் “ DDStyles ” என்ற டாக்கில் தன்னிடம் உள்ள பொருட்களை ரசிகர்களுக்கு காண்பித்து வருகிறார், இதனால் ரசிகர்களிடம் நல்ல பிரபலமாகிவிட்டார்.
இதனை தொடர்ந்து டிடி காலில் அடிபட்டு அவர் நடக்க முடியாமல் ஓய்வில் இருந்தார். இதனால் நிற்கவும், நடக்கவும் முடியாமல் இருந்த நிலையில், தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.
அந்த வகையில் கருப்பு நிற ஆடை அணிந்து ஆங்கில பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “பழைய நிலைமைக்கு வந்து விட்டார் டிடி” என கமண்ட் செய்து வருகிறார்கள்.