அன்பே வா சீரியல் நடிகை பூமிகாவா இது? ரசிகர்களை அதிரவைத்த மாடர்ன் புகைப்படங்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் நடிகை டெல்னாவின் புகைப்படங்கள் இணையத்தினை கலக்கி வருகின்றது.
தற்போது சினிமாவை விட சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றே கூறலாம்.
ஆம் புதிய முகமான அறிமுகமானாலும் தனது நடிப்பினால் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் கட்டிப்போட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் இதில் பூமிகா என்ற பெயரில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் டெல்னா.
குறித்த சீரியலில் தனக்கு கெடுதல் நினைக்கும் மாமியாரிடம் சாதுவான மருமகளாக நடித்து வருவதோடு, தனது உடன்பிறப்பு, தாய்கும் தனது கடமையினை செய்யும் நடுத்தர குடும்ப பெண்ணாக நடித்து வருகின்றார்.
இவரது புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது. இவ்வளவு மாடர்னா இருப்பாரா? என்ற கேள்வியினை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


