திருமணத்திற்கு சென்ற இடத்தில் படுமோசமாக நடந்துக் கொண்ட பிரபல நடிகை: வன்மையாக திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!
திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு மோசமாக நடந்துக் கொண்ட சம்பவம் தற்போது புகைப்படத்துடன் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த செய்தி தற்போது இணையவாசிகளால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அனன்யா பாண்டே
பொலிவூட்டின் பிரபல நடிகரான சங்கி பாண்டேயின் மகள் தான் அனன்யா பாண்டே.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2' படத்தின் மூலம் பொலிவூட் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றிருந்தார்.
மேலும், இவர் 'பதி பத்னி அவுர் வா' போன்ற படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இது மட்டுமல்லாமல் அண்மையில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிற்கும் அறிமுகமானார்.
பொது இடத்தில் மோசமாக நடந்து கொண்ட நடிகை
இந்நிலையில், மும்பையில் உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துக் கொண்டிருந்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
அந்தப் புகைப்படத்தில் அனன்யா பாண்டே ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு புகைப்பிடிப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் பொது இடத்தில் இப்படியா நடந்துக் கொள்வது என கடும் சொற்களால் திட்டி வருகின்றார்கள்.