ஆனந்த அம்பானி- ராதிகா ஜோடி எங்க ஹனிமூன் போயிருக்காங்க தெரியுமா?
ஆன்ந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் ஹனிமூன் சென்ற இடம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆன்ந்த்- ராதிகா திருமணம்
கடந்த சில மாதங்களாக இந்தியா உட்பட முழு உலகையும் பரபரப்பாக்கிய நிகழ்வு தான் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம்.
பல்லாயிரம் கணக்கில் பிரம்மாண்டமாக செய்யப்பட்ட ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்த ஆனந்த் - ராதிகா இருவரும் ஹனிமூனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹனிமூன் எங்கு தெரியுமா?
அதன்படி, முகேஷ் அம்பானி மகனை ஹனிமூனுக்காக கோஸ்டாரிகாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
General Directorate of Migration அறிக்கையின் படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகஸ்ட் 1 அன்று கோஸ்டாரிகாவை அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து புதுமணத் தம்பதிகள் காசா லாஸ் ஓலாஸில் தங்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
இங்கு தங்குவதற்கு முன்னர் அந்த தனித்துவமான இடத்தை விருந்தினருக்கு ஏற்ப ஆடம்பரமாக வடிவமைப்பார்கள்.
இந்த Resort- ல் தங்குவதற்கு ஒரு இரவுக்கு $30,000 அதாவது ரூ. 25 லட்சத்திற்கு அதிகமாக அறவிடுவார்களாம்.
Resort-ல் உள்ள சிறப்பம்சங்கள்
- காசா லாஸ் ஓலாஸ் பிரீட்டா விரிகுடாவின் காட்சிகளைக் கொண்ட ஒரு ஆடம்பரமான Resort.
- காஸ்மோபாலிட்டன் நேர்த்தியான வீட்டு வசதியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
- திறந்தவெளிகள், பனை மரங்கள் மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த முன்புறம் போன்றவற்றை கொண்டிருக்கும்.
- மாஸ்டர் படுக்கையறைகள் விரடோர் கடற்கரையின் பாறைகள் மற்றும் நீரின் காட்சியை வழங்குகிறது.
- ஒரு அதிநவீன ஊடக அறை மற்றும் ஒரு கம்பீரமான 100-அடி குளத்தால் சூழப்பட்ட விரிவான வெளிப்புற பொழுதுபோக்கு பகுதி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |