ஆனந்த அம்பானியின் திருமண தினத்தை அறிவித்த முகேஷ் அம்பானி... எப்போ தெரியுமா?
உலகப் பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த அம்பானியின் திருமணம் எப்போது நடக்கும் என்ற தகவலை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.
ஆனந்த் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது காதலியான ராதிகா மெர்ச்சன்டுடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட பிறகு அவர்கள் இருவரும் அவர்கள் பல்வேறு பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துக் கொண்டிருந்தனர்.
மேலும், என்கோர் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவரான வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் அவரது மனைவி ஷைலன் மெர்ச்சன்ட் ஆகியோரின் மகளான ராதிகாவும் தனது மாமியார்களுடன் அழகான பந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார்,
இருப்பினும், ஆனந்த் மற்றும் ராதிகாவின் மில்லியன் கணக்கான ரசிகர்கள் அவர்களின் திருமண செய்தியைப் பெற பொறுமையின்றி காத்திருந்தனர். இப்போது, ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண திகதி குறித்த முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார்.
அதன்படி, முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண திகதியை 2024 ஆம் ஆண்டு ஜூலை 10, 11, 12 ஆகிய திகதிகளில் பிரமாண்டமாக நடைபெறும் பெறும் என வெளியிட்டிருக்கிறார்கள்.
இவர்களின் இந்த திருமண திகதி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |