அம்பானி வீட்டு விஷேசத்தில் தென்னிந்திய உணவுகளை சமைப்பது யார் தெரியுமா? புகைப்படங்களால் லீக்கான தகவல்
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்ட் Pre-Wedding நிகழ்ச்சியில் தென்னிந்திய உணவுகளை சமைத்த சமையல்காரர்கள் தொடர்பிலான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அம்பானி வீட்டு விஷேசம்
அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி இன்னும் சில நாட்களில் கப்பலில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அவர் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றது.
மேலும் தற்போது ஸ்பெயினில் ஆனந்த் அம்பானியின் இரண்டாவது Pre-Wedding கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
1200 கோடி வைத்த Pre-Wedding நிகழ்வுகளை பார்க்க 600 ஊழியர்கள் வைத்து திருமணம் இன்னும் பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது.
அம்பானி வீட்டு திருமணம் என்றால் அதில் ஏகப்பட்ட வகையான உணவுகள் சமைக்கப்படும். இதனை யார் சமைக்கிறார்கள்? என்னென்ன வகையான உணவுகள் சமைக்கப்படுகின்றனர்? என்பது பற்றி பதிவில் காணலாம்.
யார் சமைக்கிறார்கள் தெரியுமா?
அந்த வகையில், அம்பானி வீட்டு விஷேசத்தில் தென்னந்திய உணவுகளை பெங்களூர் - ராமேஷ்வரம் கஃபே உணவக ஊழியர்கள் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திருமணம் நடக்கும் Celebrity Ascent Cruise கப்பலில் தென்னிந்த உணவுகளான பொடி இட்லி, மற்றும் பொடி தோசை முதலான உணவுகளும் பறிமாறப்படவுள்ளதாம்.
ராமேஷ்வரம் கஃபேயின் இணை நிறுவனரான ராகவேந்திர ராவ் இதனை அவருடைய இன்ஸ்கிராம் பக்கம் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், ராமேஷ்வரம் கஃபே உணவக ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |