அம்பானியின் மகனின் திருமணத்திற்கு வரும் VVIP விருந்தினர்கள்
அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் பல உலகளாவிய விருந்தினர்கள் வருகை தர உள்ளனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை
முகேஷ் அம்பானியின் இளையயமன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமண சுபநிகழ்வுகள் மும்பையில் முன்கூட்டியே நடைபெற்று வரும் நிலையில் இந்த திருமண விழாவிற்கு பல உலகளாவிய விருந்தினர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பானியின் ஒரு நிறுவனமான ரிலையன்ஸ் அறக்கட்டளை இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டது.
இந்த வீடியோவில் குஜராத்தைச் சேர்ந்த பெண்கள் திருமணத்திற்காக பந்தானி தாவணியைத் அணிந்து வரும் வீடியோவில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி உள்ளார்.
மற்றும் அதில் காதல் மற்றும் பாரம்பரியத்தின் இழைகள் ஆனந்த் மற்றும் ராதிகாவுக்காக நெய்யப்பட்ட நாடா" என்ற பதிவையும் பதிவிட்டுள்ளனர்.
இந்திய பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அம்பானி குடும்பம் இந்த பாரம்பரியத்தை கையாண்டுள்ளனர்.
அம்பானி குடும்பம் கட்ச் மற்றும் லால்பூரைச் சேர்ந்த திறமையான பெண் கைவினைஞர்களை கொண்டு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்காக திரைச்சீலையை நெசவு செய்ய நியமித்துள்ளது.
இந்த திருமணத்தில் பல உலகளாவிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மார்க் ஜுக்கர்பெர்க் மோர்கன், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டான்லி, டெட் பிக் தலைமை நிர்வாக அதிகாரி பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பாப்
இகர் லாரி ஃபிங்க் சுல்தான் அகமது அல் ஜாபர், அட்னாக் தலைமை நிர்வாக அதிகாரி லின் ஃபாரஸ்டர் டி ரோத்ஸ்சைல்ட் பேங்க் ஆஃப் அமெரிக்கா தலைவர் பிரையன் தாமஸ் மோய்னிஹான் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன்,
பிளாக்ஸ்டோன் தலைவர் கத்தார் பிரதமர் முகமது ,பின் அப்துல்ரஹ்மான் அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண், லூபா சிஸ்டம்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் முர்டோக் ஹில்ஹவுஸ் ,கேபிடல் நிறுவனர் ஜாங் லீ BP தலைமை நிர்வாகி முர்ரே ஆச்சின்க்ளோஸ் எக்ஸோர் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் எல்கன் புரூக்ஃபீல்ட் ,சொத்து மேலாண்மை தலைமை நிர்வாக அதிகாரி புரூஸ் பிளாட் போன்றோர் கலந்துகொள்ள உள்ளனர்.