புற்றுநோயால் மறைந்த சிங்கப்பூர் தமிழர் ஆனந்த கண்ணன் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் தெரியுமா? வைரல் புகைப்படம்!
90-ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான தொகுப்பாளர் என்று அறியப்பட்டவரும், பல்வேறு கிராமப்புற கலைகளை தொடர்ந்து சர்வதேச அளவில் அரங்கேற்றியவருமான ஆனந்த கண்ணன்.
இவர், கடந்த நாட்களுக்கு முன் இரவு மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். மேலும், மீடியா உலகின் பிரபலமான விஜேவாக, ஸ்டைலிஷ் நபராக அறியப்பட்டவர்.
நடிகர் விஜய் தொடங்கி பல்வேறு பிரபலங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் அறியப்பட்டவர். சிங்கப்பூர் தமிழரான இவர் அங்கு கடந்த சில வருடங்களாக வசித்து வந்தார். தமிழர்களின் கிராமிய கலைகள் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் அங்கு இது தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இதன் பின்னர், நிறைய விஜே வாய்ப்புகள் தேடி வந்த போதும் கூட கிராமிய கலை நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க கொண்டு செல்வதில் இவர் ஆர்வமாக இருந்தார். முக்கியமாக சிந்துபாத் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்ததால் நிறைய சீரியல் வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது.
ஆனாலும், அந்த துறைகளில் மீண்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து சிங்கப்பூரில் கலை பணிகளை செய்து வந்தார். அதோடு மேடை நாடகம், நடனம், பறையிசை கலை என்று மற்ற துறைகளிலும் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில், தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஆசன குடல் புற்றுநோய் ஏற்பட்டது. இது. மிக மிக அரிதாக ஏற்படும் இந்த புற்றுநோய் Cholangiocarcinoma அல்லது bile duct cancer என்று அழைக்கப்படுகிறது.
மேலும், இதை குணப்படுத்துவதும், சிகிச்சை அளிப்பதும் மிக மிக கடினமான விஷயம். பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இந்த ஆசன குடல் புற்றுநோய் ஏற்படும் என்றாலும் கூட சமயங்களில் வயது குறைவானவர்களுக்கும் இது ஏற்படுகிறது.
இந்த அரிதான புற்றுநோய் தாக்கிய காரணத்தால்தான் ஆனந்த கண்ணன் பலியாகி இருக்கிறார். இவரைப்பற்றி அன்றாடம் சுவாரசியமான தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், தற்போது இவரின் திருமணப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.