மின்னல் வேகத்தில் தயாராகும் தோசை! ரோபோவையும் மிஞ்சிய மாஸ்டர்... மில்லியன் பேரை மிரள வைத்த காட்சி
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமாக, நகைச்சுவையாக ட்விட் செய்வதில் ஆர்வமுள்ளவர்.
தற்போது ஒரு ட்ரெண்டிங் வீடியோ ஒன்றை ஷேர் செய்து நெட்டிசன்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார்.
அதில் சாலையோர கடை ஒன்றில் ஒருவர் தோசை செய்யும் காட்சிகள் அடங்கியுள்ளது.
28 வினாடிகள் அடங்கிய வீடியோ கிளிப்பில் ஒருவர் அடுப்பில் ஒரே நேரத்தில் நான்கு தோசைகளை ஊற்றி அதன்மீது சில மசாலாக்களை சேர்கிறார்.
பின்னர் நன்கு வெந்ததும் ஒவ்வொரு தோசையாக எடுத்து அதனை வெட்டி மடித்து தட்டில் வைத்து சற்று தூரமாக இருக்கும் ஒருவருக்கு அனுப்பி வைக்கிறார். அதேபோல மீதி இருக்கும் தோசைகளையும் செய்கிறார்.
அப்போது ஒரு இயந்திரம் போல மிக வேகமாக பணியாற்றுகிறார்.
This gentleman makes robots look like unproductive slowpokes… I’m tired just watching him…and hungry, of course.. pic.twitter.com/VmdzZDMiOk
— anand mahindra (@anandmahindra) August 17, 2021