அந்த வீடியோவ பாத்து இப்படி நெனைச்சுட்டாங்க! அதிரடியாக அடுத்த வீடியோவை வெளியிட்ட கராகாட்டக்காரன் கனகா
பிரபல நடிகை கனகா அண்மையில் வெளியிட்ட காணொளி வைரலான நிலையில் மீண்டும் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசி பப்ளிசிட்டி பண்ண எண்ணி அந்த வீடியோவை பதிவிடவில்லை.
நான் இதுவரை எதையும் கற்கவும் இல்லை. அன்று சொன்னது போல் புதிதாக கற்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
அவற்றை எதுவும் நான் கற்க தொடங்கவில்லை. இப்போது மீண்டும் யோசிக்கிறேன். அவற்றை புதிதாக கற்க வேண்டுமா? எனக்கு தெரிந்தது, எனக்கு நன்றாக வருவதையே வைத்துக்கொண்டு தொடரலாமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
பலரும் நான் பப்ளிசிட்டிக்காகவும், மீண்டும் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி வீடியோ பதிவிடுவதாக நினைக்கின்றனர். இதேபோல் எனக்கு வியாதி இருப்பதாகவும் நினைக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் பேசியவர், “உண்மையில் நான் உங்களுடன் மீண்டும் உரையாடுவதற்காகவே இந்த தளத்திற்கு வந்தேன். அட்டகாசமாகவும் அமர்க்களமாகவும் உங்களுடன் புதிய ஒன்றை ஆலோசனையாக பெறவும், பகிரவும் முயற்சித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.