தீபாவளிக்கு அடுத்த நாள் வானத்தை அலங்கரிக்கும் கிரகணம்!
தீபாவளிக்கு அடுத்த நாள் 30 நிமிடங்களுக்கு தொடர் சூரிய கிரகணம் நடைப்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய தினம் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது, மறுநாள் சூரிய கிரகணம் தோன்றவுள்ளது.
இந்த கிரகணம் அக்டோபர் 25 ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 5:14 மணிக்கு தொடங்கி 5:44 மணி வரை நடைபெறும். அந்த வகையில் இந்த கிரகணம் குறித்து மேலதிகமாக தொடர்ந்துந் தெரிந்துக் கொள்வோம்.
தென்படும் நாடுகள்
80% வரை துல்லியமாக பாரக்ககூடிய இடங்களாக, ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் சில பகுதிகளை கூறலாம்.
அதேபோல் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் காட்சியளிக்கும்.
சேதம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலிலும் சூரிய கிரகணம் காட்சியளிக்கும். இது மாலை நேரத்தில் திகழும் அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு முன் இந்த கிரகணம் நிகழ இருக்கிறது.
இந்தியா - சென்னை மற்றும் கொல்கத்தாவில், கிரகணத்தின் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடங்கள் மற்றும் 12 நிமிடங்களாக கிரகணம் இருக்கும் என கூறப்படுகிறது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சிறிது நேரம் கூட பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
சூரியனின் பெரும்பகுதியை சந்திரன் மறைத்தாலும் அது கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.
மக்கள் பின்பற்றும் நடைமுறைகள்
மக்கள் யாரும் வெளியே செல்லாது வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்.
உணவருந்த மாட்டார்கள்.
தர்ப்பை புல் மற்றும் துளசி இலைகளை கிரகத்தின் போது தீய விளைவுகளை தடுக்க உணவு மற்றும் தண்ணீரில் போட்டு வைப்பார்கள்.
கிரகணத்தின் பின்னரான குளியலை விரும்புவார்கள்.
புதிய ஆடைகள் அணிதல்.
கிரகணம் முடிந்தவுடன் சூரிய பகவானுக்கான மந்திரங்களை உச்சரிப்பார்கள்.