தீவில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட உயிர்கள்! ரத்த வெள்ளமான கடற்கரை... பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போரோ தீவில் உள்ள கடற்கரை ரத்தவெள்ளத்தில் காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கான காரணம் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில், இது ஒரு பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டது.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போரோ தீவில் மக்கள் தங்கள் பாரம்பரிய திருவிழாவின் ஒரு பகுதியாக படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்து கத்தியை வைத்து வெட்டி கொன்று குவித்துள்ளனர்.
இதனால் கடற்கரை பகுதி நீர் முழுவதும் டால்பின்களின் ரத்தத்தால் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்துள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு விலங்கு நல ஆர்வலர்களும் கடல் நீரை மாசுபடுத்தியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.