பணம் மூட்டை மூட்டைய கொட்ட வேண்டுமா? மகாலட்சுமியின் அருள் கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்!
சிலருக்கு பணமழை பொழியும் கை நிறைய சம்பாதிப்பார்கள். சிலரோ தினசரி கூலி வேலை செய்து சம்பாதித்து இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வார்கள்.
பணம் சேமிக்க வேண்டும் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் சில காரியங்களை மறக்காமல் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
இறை சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம்
- வீட்டில் உள்ள பூஜையறையில் தேவையில்லாத உடைந்த பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள்.
- இது இறை சக்தியைக் குறைக்கும். மேலும் அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது.
- மிகக்குறைந்த பொருட்களை மட்டும் பூஜையறையில் வைத்து கொள்ளுங்கள்.
- வெறுமனே தூபதீபம் காட்டுவதை விட கடவுளுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள், ஸ்லோகங்கள், நாமங்களை உச்சரித்தபடி பூஜை செய்வது மிகவும் சிறந்தது.
- பஞ்ச பாத்திரத்தில் வைத்திருந்த தீர்த்தத்தை நாம் பருகிய பிறகு மீதம் உள்ளதை மறுநாள் காலையில் செடிகளுக்கும், மரங்களுக்கும் ஊற்ற வேண்டும். தரையில் ஊற்றக்கூடாது.
கோலம் போடுவது அவசியம்
வாரம் ஒரு முறையாவது பூஜையறையில் உள்ள படங்களையும், பூஜைக்குரிய மேஜைகளையும் துடைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெண்ணெயை உருக்கக்கூடாது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் லட்சுமிக்கு உகந்தவை ஆகும்.
மேலும், வெண்ணெயில் மகாலட்சுமி இருப்பதால் வெண்ணெயை உருக்கக்கூடாது.
செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது. வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
பணம் பர்ச்சில் எங்கு வைக்க வேண்டும்
பெண்களை அடித்து கண்ணீர் சிந்த வைக்கக் கூடாது.
செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பெண்களிடம் சண்டை போடாமல் இருப்பது நல்லது.
மல்லிகை பூக்களை மனைவிக்கு வாங்கித்தரலாம்.
பண இருப்பை உடலின் முன்பக்கத்தில் சட்டையின் மேல் பகுதியிலும் பேண்ட் பாக்கெட்டில் முன் பகுதியிலும் வைத்துக் கொள்வது, இவைகளையெல்லாம் ஆண்கள் பின்பற்றும் பொழுது மகாலட்சுமியின் ஆசிகள் கிடைக்கும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.