உடல் எடையைக் குறைக்க சிரமப்படுகின்றீர்களா? நெல்லிக்காய் செய்யும் அற்புதம்
வைட்டமின் சி அதிகம் கொண்ட நெல்லிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. குறித்த நன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றது.
இதில் இருக்கும் வைட்டமின் சி சத்தானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சேதமடைந்த செல்களையும் பாதுகாக்கின்றது.
நெல்லிக்காயில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுவதுடன், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கின்றது.
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சினை ஏற்படாமலும், மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றது. ஆரோக்கியமான குடல் இயக்கத்தையும் ஊக்குவிக்கின்றது.
கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நெல்லிக்காய் பயன்படுகின்றது. மேலும் இதய ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |