முடி அதிகமாக உதிர்கின்றதா? நெல்லிக்காயை தினமும் எடுத்துக்கோங்க
கூந்தல் பராமரிப்பிற்கு நெல்லிக்காய் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்
உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் நெல்லிக்காய், கூந்தலுக்கும் அதிக பலனைக் கொடுக்கின்றது.
நெல்லிக்கயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் உச்சந்தலை, முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடம்பிற்கு தேவையான ரத்தத்தை அதிகரிக்கவும் செய்கின்றது. புத்துணர்ச்சியுடன் வைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.
முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய்
இது முடியின் வேர்க்கால்களுக்கு ஒரு புரதம் போல செயல்பட்டு, அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகின்றது.
உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தினை சீராக்கி மயிர்க்கால்களைப் புத்துணர்ச்சியடையச் செய்கின்றது. மேலும் இளநரையைத் தாமதப்படுத்தவும் செய்கின்றது.
முடி அடர்த்தி குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காயை தாராளமாக பயன்படுத்தலாம்.
நெல்லிக்காயை எண்ணெய்யாகவும், அல்லது பொடியாகவும் பயன்படுத்தலாம். மேலும் நெல்லிக்காய் சாறு வெறும் வயிற்றில் பருகிவந்தால், உடம்பில் தேவையாற்ற கொழுப்பு சேராமல் தவிர்க்க முடியும்.
மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் நெல்லிக்காயை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |