சின்ன மருமகளின் சேட்டையால் வீட்டை விட்டே போன மூத்த மருமகள்! வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்
இந்த வார தமிழா தமிழா சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் மூத்த மருமகள்கள் மற்றும் இளைய மருமகள்கள் என்ற இரு தரப்பினருக்கும் இடையில்,காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற மூத்த மருமகள்கள் அணியில் ஒரு பெண் சின்ன மருமகளால், தன் கணவர் வங்கியில் கடன் எடுத்து கட்டிய வீட்டை விட்டே வெளியேறிய சம்பவம் குறித்து அரங்கில் பகிந்துக்கொண்ட போது அதனை கேட்ட இளைய மருமகள் அசால்ட்டாக நீங்கள் தான் போராடி இருக்க வேண்டும் என கூறிய காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி இணையத்தில் கடுமைான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் ஜீ தொலைக்காட்சியில், நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவான ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. அதில் இடம் பெற்ற சில பரப்பரப்பான வாதத்தின் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் படு வைரலாகி புதிய புயலை கிளப்பி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |