என்னடா இது... கொளுத்தும் வெயிலில் புது விசிறியா இருக்கு... - அமிதாப்பச்சன் பகிர்ந்த வீடியோ!
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமிதாப்பச்சன் பகிர்ந்த வீடியோ வைரல்
இந்தியாவில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4ம் தேதி முதல் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது கொளுத்தும் வெயிலில், அனல் காற்று வீசி வருகிறது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் கடந்துள்ளது. சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெயில் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கொளுத்தும் வெயிலுக்கு தன் தலை முடியை மின்விசிறி போல பயன்படுத்தி போலீஸ்காரர் ஒருவர் நடந்து செல்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் உண்மையில் வெயிலின் தாக்கம் தாங்கிக்கொள்ள முடியவில்லை.