வாகன நெரிசலால் பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன் - வைரலாகும் புகைப்படம்
வாகன நெரிசலால் சிக்கிய நடிகர் அமிதாப் பச்சன் தெரியாத ஒருவரிடம் பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வாகனங்களின் தேவைகள் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு வாகன கூட்ட நெரிசலும் அதிகரித்து வருகிறது.
சிலர் வேகமாக சென்று ஏதாவது விபத்து ஏற்படுத்திவிட்டால், அவ்வளவுதான் வாகனம் கூட்ட நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்து விடுவார்கள்.
தற்போது, அக்னி காலம் தொடங்கியுள்ளதால் கொளுத்தும் வெயிலில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டால் வாகன ஓட்டிகளை நிலைமையை சற்று நினைத்துப் பாருங்களே..
லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்
இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் இதே மாதிரியான வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார். இதனால், தன்னுடைய கார் நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தது.
படப்பிடிப்புக்கு தினமும் நேரம் தவறாமல் செல்லும் அமிதாப் பச்சன் என்னசெய்வது என்று தெரியாமல் திகைக்க, சற்று கூட யோசிக்காமல் பைக்கில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
அந்த நபரோ அமிதாப் பச்சனை பார்த்ததும் மகிழ்ச்சியில் வாங்க.. வாங்க... நான் கூட்டிக்கொண்டு செல்கிறேன் என்று அமிதாப் பச்சனை அழைத்துக் கொண்டு சரியான நேரில் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு அந்த நபருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “என்னை பைக்கில் அழைத்துச் சென்றதுக்கு நன்றி நண்பா... நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது.. ஆனால் என்னை சரியான நேரத்தில் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றீர்கள்.. தீர்க்க முடியாத போக்குவரத்து நெரிசல்கள்.. தொப்பி, ஷார்ட்ஸ் மற்றும் மஞ்சள் நிற டி-சர்ட் உரிமையாளருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.