படுக்கையறையில் கிளம்பிய புது சர்ச்சை! கமல் குறும்படம் போடுவாரா? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்
பாவனியை இந்த சீசனில் வீட்டில் இருக்க வைத்து கடைசி வரை வச்சு செய்ய பிக் பாஸ் டீம் திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
அபிநய் உடன் இத்தனை வாரம் பாவனிக்கு நடந்த பிரச்சனைகள் பெரும் குறும்படமாக போடப்பட்டு அசிங்கப்படுத்திய நிலையில், அடுத்ததாக அமீர் உடன் அவர் நெருக்கமாக பழகி வரும் காட்சிகள் அதிகமாக காட்டப்படுகின்றன.
அபிநய் தன்னை காதலிப்பது போல தெரிகிறது என அவர் காதலிக்காமல் இருக்காத போதே அசிங்கப்படுத்திய பாவனி அமீர் துரத்தி துரத்தி தன்னை காதலிப்பதாக சொல்லி அசிங்கப்படுத்தியும் அமைதியாக இருப்பது ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

என்னை விட சின்ன பையன் நீ என்றும் அமீரின் காதலுக்கு நோ மீன்ஸ் நோ என சொன்ன பிறகும் அமீர் எல்லை மீறி படுக்கையறையில் பேசிக் கொண்டிருக்கும் போது ரகசியம் சொல்வது போல வந்து பாவனிக்கு முத்தம் கொடுத்தது பிக் பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இதே போல சிம்பு த்ரிஷாவுக்கு ரயிலில் முத்தம் கொடுப்பது போலவே இந்த காட்சி அரங்கேறியதை பார்த்த ரசிகர்கள் நல்லா விடிவி படம் ஓட்டுறீங்க என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அந்த காட்சியில் கூட த்ரிஷா சிம்புவை அடித்து விடுவார் அனால், பாவனி அமீரிடம் அவ்வளவு சாதாரணமாக இப்போ நீ பண்ணது பிடிக்கல என்று மட்டும் சொன்னதை பார்த்த ரசிகர்கள் ராஜுவிடம் மட்டும் அப்படி பொங்குனீங்க அப்போ உங்களுக்கும் அமீர் மீது உள்ளுக்குள் காதல் இருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அது மட்டும் இல்லை நாளை கமல் குறும்படம் போடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.