குட்நியூஸ் சொன்ன பிக்பாஸ் ஜோடி: வாழ்த்துக்களுடன் வைரலாகும் போட்டோஸ்
பிக்பாஸ் காதல் ஜோடிகளான அமீர் பாவனி புகைப்படங்களை வெளியிட்டு குட்நியூஸ் சொல்லியிருக்கிறார்.
அமீர் பாவனி
பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜோடி தான் அமீர்-பாவனி. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவருமே ஏதோ ஒரு வகையில் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள்.
அந்தவகையில் வந்த காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவனி. வைல்ட் கார்ட் என்ரியாக வந்து பாவனி மீது காதல் கொண்டு இறுதி வரை சென்றவர் அமீர். பாவனியும் அதே தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமானவர்.
அமீர் தன் காதலை பாவனியிடம் வெளிப்படுத்தியதும் காதலை ஏற்காமல் மறுந்து வந்த பாவனி நாளடைவில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்கின்ற வரைக்கும் சென்றிருக்கிறது. மேலும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் சொல்லியிருந்தார்.
புதிய கார்
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்கள் தற்போது புதிய கார் வாங்கியுள்ளதாக சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.