நான் அட்வகேட்... போலீசை வசைபாடிய பெண் வக்கீல் மீது நடிகை கஸ்தூரி ஆவேசம்
காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் வழக்கறிஞர் மீது தொற்றை பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், அரசின் உத்தரவை மீறுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
'நான் அட்வகேட்... உன் யூனிபார்மை கழட்ட வச்சுடுவேன் என்று சொன்னதோடு காது கூசும் அளவிற்கு ஒருமையில் திட்டினார்.
கொரோனா தொற்று காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் காவல்துறையினரின் மனதை புண்பட வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பதிவில், எந்த ஒரு மதிப்பான வழக்கறிஞரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள்.
ஒரு பெண்ணாகவும், வழக்கறிஞராகவும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.