viral video: 27 அடி நீள அமேதிஸ்டைன் மலைப்பாம்பு தோல் அகற்றுவதை பார்த்துள்ளீர்களா? புல்லரிக்கும் காட்சி
அமேதிஸ்டைன் மலைப்பாம்பு நுட்பமான முறையில் தனது பிரம்மாண்டமான தோலை அகற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே அமேதிஸ்டைன் மலைப்பாம்பு நீளமான, மெல்லிய, விஷமற்ற பாம்பு இனமாகும். இதன் அளவு மற்றும் தனித்துவமான நிறத்தால் பிரபல்யம் வாய்ந்தது. இது பைத்தோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு வகையாகும்.
அமேதிஸ்டைன் மலைப்பாம்பு முக்கியமாக இந்தோனேசியா, நியூ கினியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் கடலோர மழைக்காடுகளில் அதிகமாக வாழ்கின்றது.
குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆக்கிரமிப்பு இனமாக இது கருதப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவின் மிக நீளமான மலைப்பாம்பு இனமாக இருக்கின்றது.
இவை 27 அடி நீளம் வரை வளரக்கூடியது. இது 27 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். பொதுவாக இவை மிகவும் நீளமான பாம்புகள் என்பதால் அவற்றில் ஆடையை நீக்குவது, அதாவது இவற்றின் வெளிப்புற தோலை அகற்றுவது மிகவும் பெரிய செய்ன்முறையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |