குழந்தைகளை அட்டைப் பெட்டிக்குள் வைத்த தயார்! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்
வீட்டு வேலைகளை இலகுப்படுத்துவதற்கான தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அட்டைப் பெட்டிக்குள் அடைத்து வைத்த தாயின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் இருக்கும் வீடுகள்
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அம்மாக்களின் வேலை மற்றைய நேரங்களை விட அதிகமாக இருக்கும்.
இதனால் சிலர் குழந்தைகளுக்கென தனி அறை அல்லது அவர்களை பார்த்து கொள்ள தனி நபர் என விளையாடுவதற்கு வைத்திருப்பார்கள்.
காரணம், குழந்தைகள் கண்ணில் காண்பது அனைத்தையும் இழுத்து விளையாடுவார்கள். இதனால் சில வீடுகளில் முக்கியமான சில அம்சங்கள் இல்லாமல் சென்று விடுகிறது.
இதன்படி, அமெரிக்கா - ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்த 2 தொடக்கம் 3 வயது கொண்ட இரண்டு குழந்தையின் தாயாரான கேப்ரியல் டன் என்ற பெண் வீட்டு வேலைகளை இலகுப்படுத்துவதற்கான தன்னுடைய இரண்டு குழந்தைகளை அட்டைப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கிறார்.
குழந்தைகளை அட்டைப் பெட்டிக்குள் வைப்பதற்கு இதுதான் காரணமா?
அவர்கள் விளையாடுவதற்காக ஒரு கலர்ப் பெட்டியொன்றையும் அந்த அட்டைப் பெட்டிக்குள் வைத்திருக்கிறார்.
கேப்ரியலின் இந்த செயல், “ Ultimate mum hack” என்ற பயனர் அவருடைய டிக் டோக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ குழந்தைகள் நடமாடி விளையாட வேண்டும்.
இவ்வாறு அட்டைப் பெட்டிக்குள் வைப்பது நெருக்கடி ஏற்படுத்தும்.” என கருத்துக்களில் வறுத்தெடுத்து காய போட்டுள்ளனர்.