20 வருடங்களாக மெத்தை சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய பெண்!
நாம் படுக்கும் மெத்தையை கிழித்து சாப்பிடும் வினோத பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹார்மோன்ஸ் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள்
பொதுவாக சில ஹார்மோன்ஸ் மாற்றங்களில் கல், சாம்பல் மற்றும் மண் போன்ற பொருட்களை உணவுக்கு பதிலாக எடுத்துக் கொள்வார்கள். இதற்கு சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.
இதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் எனும் பெண் சுமார் 20 வருடங்களாக மெத்தையை சாப்பிட்டு வருகிறார்களாம். இவருக்கு இந்த உணவு மிகவும் பிடித்தது இல்லையென்றால் ஜெனிபரின் 5 வது வயதிலிருந்து சாப்பிடுகிறாராம்.
இந்த உண்மையை TLC சேனலில் வெளியான ’My Strange Addiction’ என்ற ஷோவில் கூறியிருக்கிறார்.
அதில் “தனக்கு முதலில் கார் சீட்டிலிருந்த ஸ்பாஞ்சுகளை தான் பிடித்தது. இதன் பின்னர் மெத்தை சாப்பிட ஆரம்பித்தேன். காலங்கள் செல்ல செல்ல ஒரு நாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்.
அவரின் இந்த பழக்கத்தை கட்டுபடுத்தவே முடியாது. ஒரு வழியாக எனது மெத்தையை சாப்பிட்டு முடித்து விட்டேன். தொடர்ந்து எனது அம்மாவின் மெத்தையும் சாப்பிட்டு விட்டேன்.
மெத்தை சாப்பிடும் பழக்கம்
மேலும், மயோனிஸ், வெண்ணெய் அல்லது எதுவுமே இல்லாமல் வெறுமனே மெத்தை சாப்பிடுவது என்பது மிகவும் பிடித்துக்கிறது. சில மெத்தைகள் கடினமாக துர்நாற்றம் வீசும், அதில் ஸ்பாஞ்சு தன்மையையும் இருக்காது.
இதனால் அது போன்றவைகளை சாப்பிட மாட்டேன். இந்த பழக்கத்தினால் எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லை.
சாதாரண உணவுகள் போல் தான் உடலுக்கு செல்கிறது பின்னர் வெளியேறுகிறது. மெத்தையை சாப்பிடுவதால் அடிக்கடி வாயுத்தொல்லை பிரச்சினை மட்டும் தான்.” என்று கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவர்களிடம் பரிசோதித்து பார்த்தில் மெத்தையிலிருக்கும் சில இரசாயன பதார்த்தங்களினால் காலப்போக்கில் கல்லீரல் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அத்துடன் உணவு செல்லும் குடல்களில் அடைப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது என எச்சரித்துள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இந்த பழக்கம் நெட்டிசன்களை வியப்படைய வைத்துள்ளது.