தமிழரை மணந்த வெளிநாட்டு அழகி.. பட்டுசேலையில் கோலாகலமாக நடந்த வளைகாப்பு
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிற்கு தமிழர்கள் முறைப்படி வளைகாப்பு நிகழ்வு செய்த புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க பெண்ணின் தமிழ் பற்று
பொதுவாக அண்டைய கலாச்சாரத்திலிருக்கும் மக்கள், இந்தியாவிலுள்ள தமிழர்களின் கலாச்சாரங்களில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இதன்படி, அமெரிக்கா - இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த சமந்தா ஜோஸ் என்ற பெண்ணொருவர் தமிழ் மீது கொண்ட நாட்டம் காரணமாக யுடியுப்பில் தமிழ் கற்றுள்ளார்.
பின்னர் டவிட்டர் வலையத்தளத்தின் மூலம் தங்கிலீஸில் குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு ஆரம்பித்துள்ளார். இது போன்ற பல முயற்சிகள் செய்து தமிழ் கற்றுக் கொண்டுள்ளார்.
இவர் டுவிட்டர் பக்கத்தில் நண்பராக இருந்த கண்ணன் என்பவரை 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
வளைகாப்பு ?
— samantha (@NaanSamantha) December 12, 2022
Kiki Papa getting promoted to Kiki Akka next month ❤️ pic.twitter.com/wfRGPpUME3
பாரம்பரிய முறையில் வளைகாப்பு
தன்னுடைய திருமணத்தையும் புடவை கட்டி தமிழ் பாரம்பரிய முறையில் நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார்.
இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வையும் முழுமையாக தமிழர் பண்பாட்டில் தான் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் பட்டு சேலைக்கட்டி, இரண்டு கைகளிலும் வளையல் அணிந்து தமிழ் பெண்ணாக வளைகாப்பு கொண்டாடியுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இவர்களின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.