ஒரு வேப்பங்குச்சியின் விலை ரூ.1800: அமெரிக்காவில் களைகட்டும் விற்பனை
அமெரிக்காவில் Organic Brush என்ற பெயரில் ஒரு வேப்பங்குச்சி 1800 ரூபாய்க்கு விற்கப்படும் வினோதம் அரங்கேறி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமொன்று, வேப்பங்குச்சியை விற்பனை செய்து வருகிறது, பற்களின் ஈறுகளை ஆரோக்கியமாக வைப்பதுடன் கிருமித் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என்ற விளம்பரத்துடன் வேப்பங்குச்சிகள் விற்பனை செய்யப்படுகிறதாம்.
24 டொலருக்கு அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.1800க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் அதில், உங்கள் பற்களை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குங்கள் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதைப்பார்த்த நெட்டிசன்களோ, நாம் கூட அமெரிக்காவுக்கு போய் வேப்பங்குச்சியை விற்கலாம் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட கயிற்றுக்கட்டில் நியூசிலாந்தில் 41,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
