ஆஸ்கர் விருதெல்லாம் ஒரு விருதா... எல்லாம் அரசியல்...? பிரபல இயக்குநர் பேட்டி
ஆஸ்கர் விருதெல்லாம் ஒரு விருதா? என்று பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது
சமீபத்தில், ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து 3 பிரிவுகளில் படங்கள் தேர்வானது.
சிறந்த பாடலுக்காக ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டார்கள்.
பட்டென போட்டுடைத்த இயக்குநர் அமீர்
இது குறித்து ஒரு சேனலுக்கு இயக்குநர் அமீர் பேட்டி கொடுத்தார்.
அப்போது அவரிடம், பல நல்ல இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை இசையமைத்துள்ள போதிலும், நாட்டுக்கூத்து பாடலுக்கு மட்டும் ஏன் ஆஸ்கர் கிடைத்தது.. ? பணம் கொடுத்து ஆஸ்கர் விருது வாங்கியதாக சொல்லப்படுகிறதே என்று கேட்க,
அதற்கு அமீர் பேசுகையில், எல்லா விருதுகளிலும் அரசியல் உள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் நடித்த காலத்தில் அவருக்கு இணையான இன்னொரு நடிகர் இந்திய சினிமாவிலேயே கிடையாது.
ஆனால் அவருக்கு ஒரு தேசிய விருது கூட கிடைக்கவில்லை. ‘தேவர் மகன்’ படத்திற்காக அவருக்கு கிடைத்த விருதை கூட அவர் பெறவில்லை.
உண்மையில் இந்த விருதுகளுக்கெல்லாம் மதிப்பே இல்லை. இதை விட்டு விலகி இருப்பதே மிகவும் நல்லது என்றார்.