அசைவமே தோற்றுப்போகும் ஆம்பூர் பாணியில் மீல்மேக்கர் பிரியாணி! இவ்வளவு ஈஸியா செய்யலாமா?
பொதுவாகவே சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் வேலைக்கு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதாலும், குழந்தைகளுக்கு பாடசாலை வி்டுமுறை என்பதாலும் நாவூக்கு ருசியாக ஏதாவது வித்தியாசமாக சமைத்து தர சொல்லி நச்சரிப்பது வழக்கம்.
[PKNWMVJ ]
இவ்வாறான நேரங்களில் அசைவ பிரியாணியே தோற்றுப்போகும் அளவுக்கு அசத்தல் சுவையில் எவ்வாறு மீல்மேக்கரை கொண்டு ஆம்பூர் பாணியில் அசத்தல் பிரியாணி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காஷ்மீரி வரமிளகாய் - 10
மீல்மேக்கர் - 1 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 1
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
புதினா - 1/2 கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
சீரக சம்பா அரிசி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் வரமிளகாயை ஒரு கிண்ணத்தில் எடுத்து வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் வரையில் ஊறவிட்டு அதனை, அரைத்து பேஸ்ட் செய்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா அரிசியை எடுத்து 2 முறை நன்றாக கழுவிவிட்டு, பின் அதில் 4 கப் நீரை ஊற்றி 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்து, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி, பிழிந்துவிட்டு தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்நிறமாக மாறும் வரையில் வதக்க வேண்டும். பின் அதில் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் அதில் தயிரை சேர்த்து நன்கு வதக்கி, மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதில், தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் அரிசி ஊற வைத்துள்ள நீரை ஊற்றி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து, நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
கொதி வந்ததும், அதில் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, 2 விசில் வரும் வரையில் வேகவி்ட்டு இறக்கினால், அசத்தல் சுவையில் மீல்மேக்கர் பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |