முகேஷ் அம்பானி வீட்டில் திருவிழா போல களைகட்டிய விநாயகர் சதுர்த்தி... கலந்துக் கொண்ட திரை பிரபலங்கள்
உலகப்பணக்காரர்களில் ஒருவரான அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த மகிழ்ச்சியான திருவிழா பல செழுமையான சடங்குகள், ஊர்வலங்கள் மற்றும் விநாயகர் சிலைகளை நிறுவுதல் ஆகியவற்றால் சிறப்பாக கொண்டாப்பட்டது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் விநாயக சதுர்த்தியை தங்கள் இல்லமான ஆண்டிலியாவில் கொண்டாடியுள்ளர். ஒவ்வொரு ஆண்டும், அம்பானி குடும்பம் தங்களின் நெருங்கிய நட்பு வட்டம் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து விழா எடுத்து கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை திருிவழா கொண்டாடியுள்ளர். இந்த விழாவில் நிதா அம்பானி, ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் ஆர்த்தி எடுத்து விநாயகரை வரவேற்று வழிபட்டிருக்கின்றனர்.
மேலும், இந்த விழாவில் தென்னிந்திய திரைப்பிரபலங்களை அழைத்து கொண்டாடியுள்ளர். அவர்களின் புகைப்படமும் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |