மொத்த நகை கடையையே வீட்டில் வைத்திருக்கும் அம்பானி வீட்டுப் பெண்கள்... மொத்தமும் விலையுயர்ந்தவை
பணக்காரர்கள் என்றால் பொதுவாகவே விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து வித்தியாசமாக காட்டிக் கொள்வார்கள் அதிலும் உலக கோடீஸ்வரர்கள் என்றால் சும்மாவா?
அப்படி அம்பானி வீட்டு பெண்கள் எல்லோரும் வைத்திருக்கும் நகைகளைப் பற்றியும் அவை ஒவ்வொன்றுக்கு பின்னால் இருக்கும் வேலைப்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி, அவரின் மகள் ஈஷா அம்பானி மற்றும் மருமகளான ஷ்லோகா மேத்தா என்போரிடம் விலையுயர்ந்த நகைகள் ஏராளமாக இருக்கிறதாம்.
முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி விழாக்களும், நிகழ்வுகளுக்கும் வெளியில் செல்லும் போது தான் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு ஏற்ற நகைகளை தான் அணிவார். அதிலும் அவர் தன் மகள் ஈஷா அம்பானி திருமணத்தில் அணிந்திருந்த வைர நெக்லஸ் பெரிதாக பேசப்பட்டது. அதாவது அந்த வைர நெக்லஸ் வைரங்களைக் கொண்டு 12 காரட் இதய வடிவில் பதிக்கப்பட்டவை அதன் விலை பல மில்லியன் டாலர்களாகும்.
அது போல மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றிற்கு அவர் அணிந்து வந்த வளையல் பிளாட்டினத்தில் செய்யப்பட்டப்பட்டது. அந்த வளையலில் நூற்றுக்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டதாம்.
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு ஆனந்த் பிரமலுடன் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணசெலவு மட்டும் 700கோடிக்கு மேல் செல்லும். அந்த திருமணத்தில் அவர் அணிந்த ஆடை மாத்திரம் 90 கோடியாம்.
அம்பானி குடும்பத்தின் மூத்த மருமகள் ஷ்லோகா அம்பானி அவரது திருமணத்தில் அணிந்திருந்த ஆடை தங்க முலாம் பூசப்பட்டது இந்த ஆடைக்கு தென்னாபிரிக்க வைரங்களை பதித்து சுமார் 3 கோடி செலவில் செய்தார்களாம்.
மேலும், இவர் வைர வியாபாரிகளின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் வகைவகையான வைர நகைகள் இருக்கிறதாம். அதுமட்டுமல்லாது 229.52 காரட் கொண்ட வெள்ளை வைர நெக்லஸ் ஒன்றை நீதா அம்பானி தன் மருமகளுக்காக கொடுத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |