அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அம்பானி கொடுத்த நன்கொடை
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெருந்தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ரூ. 2.51 கோடி நன்கொடை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கும்பாபிசேகத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பலரும் பங்கேற்றதுடன் இந்தியாவின் விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இந்த நிகழ்வில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என நூற்றுக்கணக்கான பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்த கோவில் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு பக்தர்களும், பிரபலங்களும் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர்.
இந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 2.51 கோடி நன்கொடை அளித்துள்ளார்கள்.
இந்த கோவில் ரூ.2000 கோடிக்கு அதிகமாக நிதி திரட்டப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த பாரம்பரியமிக்க சோம்புரா குடும்பத்தின் கலை முயற்சியில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ள வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில், 235 அடி அகலம், 360 அடி நீளம், 161 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர்.
அங்கோர் வாட், சுவாமிநாராயண் அக்சர்தாம் கோயில்களுக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மிகப்பெரிய கோயிலாக இது எதிர்காலத்தில் காணப்படும்.
இந்த கோவில் 57,400 சதுரஅடியில் மூன்று அடுக்குகளைக் கொண்டது.மற்றும் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன.
கோயிலுக்காக மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.