அம்பானியின் டிரைவர் வாங்கும் சம்பளம் இத்தனை லட்சமா? நம்பமுடியாத உண்மை
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டு டிரைவர் சம்பளம் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி ஆகிய இருவரும் உலக பணக்காரர் பட்டியலில் வலம் வருபவர்கள்.
மேலும் உலகின் இரண்டாவது விலையுயர்ந்த வீடு இவர்களுடையது. அதாவது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்த மாளிகை இவர்களது வீடு ஆகும்.
முகேஷ் அம்பானி மட்டுமின்றி அங்கு வேலை செய்யும் டிரைவர் கூட ஆரம்பரமாகவே வாழ்கின்றார். அவரின் மாத சம்பளம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
டிரைவரின் சம்பளம் எவ்வளவு?
ஆனால் இந்த வேலையில் சாதாரணமாக சேர்ந்துவிட முடியாது. ஆம் அம்பானி வீட்டு டிரைவர் வேலைக்கு கூட கடினமான இன்ட்ர்வியூ உண்டாம். இதற்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இன்டர்வியூ வைத்து அனுப்பப்படுகின்றார்கள்.
முகேஷ் அம்பானியின் டிரைவர் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 2 லட்சம் சம்பாதிக்கிறாராம். ஆம் அம்பானி வீட்டில் வேலை செய்யும் தலைமை டிரைவருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பிற டிரைவர்களுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பளம் கொடுப்பதற்கு காரணம் என்னவெனில், அவரிடம் இருப்பது எல்லாம் விலையுயர்ந்த கார்கள் என்பதால், அதற்கு திறமை வாய்ந்த டிரைவராக காணப்படுவர். இதனால் தான் இவ்வளவு சம்பளம் அளிக்கப்படுகின்றது.