முகேஷ் அம்பானி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்.. இதன் விலை மட்டும் இத்தனை கோடியா?
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் உள்ளவர். ஏற்கனவே ஜியோ கேரேஜ் எனப்படும் அம்பானியின் கார் சேமிப்பிடத்தில் பல லக்சரி கார்கள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது மற்றுமொரு லக்சரி காரை அம்பானி வாங்கியுள்ளார். இவரது ஜியோ கேரேஜில் சமீபத்தில் இணைத்திருக்கும் லக்சரி கார் ரோல்ஸ் ராயல்ஸ் எஸ்யூவி ஆகும்.
இந்திய சந்தையில் ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் அதன் எஸ்யூவி காரினை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வது இல்லை. ஆகையால் இதனை முகேஷ் அம்பானி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.
தொடர்ந்து, எஸ்யூவி காரில் 6.2 லிட்டர் வி8 என்ஜினை காடிலாக் நிறுவனம் பொருத்துகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 420 பிஎச்பி மற்றும் 624 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.
அம்பானியின் கேரேஜில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரும் உள்ளது. லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் ஐந்து-இருக்கை வெர்சனாக 110 விளங்குகிறது.
மேலும், வெளிநாட்டு சந்தைகளில் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் தேர்விலும் இந்த ஆற்றல்மிக்க எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரின் விலை இந்திய மதிப்பின்படி கிட்டத்தட்ட 13 கோடி ஆகும்.