மம்மிக்குள் இருக்கும் உண்மையை CT ஸ்கேனில் அலசிப் பார்த்த மருத்துவர்கள்! தோண்ட தோண்ட வெளிவரும் ஆச்சரியங்கள்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்து, அங்குள்ள பிரமிடுகளுக்கும் மம்மிகளுக்கும் பிரபலமானது.
பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பாதுகாத்து வைக்கப்பட்ட மம்மிகள் குறித்த மர்ம கதைகள் உலகளவில் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், அண்மையில் பல நூற்றாண்டுகள் பழமையான அரசக்குடும்பத்தைச் சேர்ந்த மம்மிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இத்தாலிய மருத்துவமனை ஒன்று, எகிப்து மம்மியின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க CT ஸ்கேனைப் பயன்படுத்தியுள்ளது.
பண்டைய எகிப்தியப் பாதிரியா ரான அங்கேகோன்சுவின் (Ankhekhonsu) பதப்படுத்தப்பட்ட உடல், எகிப்தில் உள்ள பெர்கமோவின் தொல்பொருள் அருங்காட்சியகத்திலிருந்து இத்தாலியின் மிலான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அந்த மம்மியை சிடி ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். வல்லுநர்கள் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையையும், அடக்கம் செய்யும் வழக்கங்களையும் ஆராய உள்ளார்கள்.
இது போன்ற சுவாரஷ்யமான தகவல்களுடன் இன்றைய வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது.