சிறிய ஓட்டை வழியாக கடலுக்குள் குதித்து தப்பி ஓடிய ஆக்டோபஸ்! மிரள வைத்த காட்சி
ஆக்டோபஸ் ஒன்று சிறிய படகில் இருந்து தப்பித்து கடலுக்குள் செல்லும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பேய்க்கணவாய் என்பது ஆங்கிலத்தில் ஆக்டோபஸ் என அழைக்கப்படுகின்றது.
பேய்க்கணவாயின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும்.
Amazing to see how such a big Octopus escapes the fishing boat through a small hole...
— Susanta Nanda (@susantananda3) December 4, 2021
Most octopuses can fit in through spaces around an inch in diameter, their beak being the only hard part.
They also have a barbed tongue with spikes & believe it or not,3 hearts.Simply woh?? pic.twitter.com/DJrY811wxp
இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு.
தற்போது இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா பேய்க்கணவாய் ஒன்றின் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேய்க்கணவாய் ஒன்று படகின் வழியே உள்ள சிறிய ஓட்டையில் இருந்து தப்பித்து கடலில் குதித்து தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடுகின்றது.