நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க

Eye Problems Cabbage Healthy Food Recipes Skin Care Immune System
By Vinoja Feb 09, 2026 03:15 PM GMT
Report

பொதுவாகவே நமது தினசரி உணவில் அதிகளவில் காய்கறிகளையும், பழங்களையும் சேர்துக்கொள்ள வேண்டியது அவசியம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காரணம் காய்கறி மற்றும் பழங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கனையும் ஏராளமாக மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க | Amazing Health Benifits Of Cabbage And Recipe

அந்தவகையில், முட்டைக்கோஸ் சத்தான காய்கறிகறிகளின் பட்டியவில் முக்கிய இடம் வகிக்கின்றது. முட்டைக்கோஸ் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கும் அத்தியாவசிய வைட்டமின்களை செரிவாக கொண்டுள்ளது.

குறிப்பாக இதில் வைட்டமின் சி சத்து அதிகளில் காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கின்றது.

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க | Amazing Health Benifits Of Cabbage And Recipe

இந்த இரண்டு ராசிகள் இணைந்தல் திருமண வாழ்க்கை செம மாஸ் தான்! ஏன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசிகள் இணைந்தல் திருமண வாழ்க்கை செம மாஸ் தான்! ஏன்னு தெரியுமா?

இது அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமானது அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.

முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ சத்தும் சிறியஅளவில் காணப்படுகின்றது. முதன்மையாக பீட்டா கரோட்டின் வடிவில் உள்ளது.

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க | Amazing Health Benifits Of Cabbage And Recipe

ஆரோக்கியமான பார்வை, மற்றும் தோல் ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் ஏ அவசியம். மூல நோயின் பாதிப்பை குறைப்பதற்கும் அஜீரணத்தால் உண்டாகும் வயிற்று வலியை நீக்கவும் உதவும்.மேலும் சரும வறட்சியை நீக்கிபொலிவைக் கொடுக்கும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளையும் பற்களையும் உறுதியாக மாற்றும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்ட முட்டைக்கோஸில் எவ்வாறு பொரியல் பண்ணலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க | Amazing Health Benifits Of Cabbage And Recipe

தேவையான பொருட்கள்

வேக வைப்பதற்கு தேவையானது

முட்டைக்கோஸ் - 250 கிராம் 

பாசிப்பருப்பு - 2 தே.கரண்டி (10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/4 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 2 

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 

உப்பு - சுவைக்கேற்ப 

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க | Amazing Health Benifits Of Cabbage And Recipe

அரைப்பதற்கு

 தேங்காய் - 1/4 கப் 

சீரகம் - 2 சிட்டிகை

செய்முறை

முதலில் முட்டைக்கோஸை சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

அதே சமயம் பாசிப்பருப்பையும் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊறவி்ட வேண்டும்.

அதனையடுத்து ஒரு இட்லி தட்டில் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி, 4 நிமிடம் வேகவிட்டு எடுக்க வேண்டும். 

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க | Amazing Health Benifits Of Cabbage And Recipe

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அதில் வேக வைத்துள்ள முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக கிளறிவிட்டு இறக்கிக்கொள்ள வேண்டும். 

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க | Amazing Health Benifits Of Cabbage And Recipe

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து கொரகொரப்பான பதத்தில்  அரைத்துக் வைத்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக அரைத்த தேங்காயை பொரியலுடன் சேர்த்து, அதோடு கொத்தமல்லியையும் தூவி நன்றாக கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆரோக்கிய நன்மைகளை வாரிக்கொடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல் தயார்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US