எலுமிச்சை ஜூஸில் கருப்பு உப்பு சேர்த்து குடித்தால் எடை கிடு கிடுனு குறையுமாம்! எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?
உங்கள் எடையை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுகளை அகற்றவும் உதவக்கூடிய ஒரு பானம் கருப்பு உப்பு சேர்க்கப்பட்ட எலுமிச்சை நீர். இதை குடிப்பதால் உடலில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எடை இழப்பிற்கு எலுமிச்சை நீர் டயட் மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் நமது உடலின் அதிக எடையை குறைக்க நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான இரண்டு குறிக்கோளாகும். சில உணவுகளை ஒருங்கிணைத்து உட்கொள்வதால் நமது உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது , எடை இழப்பு செயல்பாடு விரைவாகிறது.
அத்தகைய ஒரு சிறந்த ஒருங்கிணைப்பு எலுமிச்சை நீர் மற்றும் கருப்பு உப்பின் ஒருங்கிணைப்பு. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவதால் வயிற்று கொழுப்பு குறைகிறது. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மிக அதிகம் உள்ளது , இதன் கலோரி அளவும் குறைவு. மேலும் எலுமிச்சையில் மிக அதிக ஆன்டிஆக்சிடென்ட்கள், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன.
எலுமிச்சை நீர் பருகுவதால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கிறது, உங்களை நீர்ச்சத்துடன் வைக்க உதவுகிறது, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடை குறைய உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் கொண்ட எலுமிச்சை சாற்றுடன் கருப்பு உப்பு சேர்ப்பதால், இந்த பானத்தின் நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. கருப்பு உப்பு இயற்கை கனிமங்களின் ஆதாரமாக விளங்குகிறது மற்றும் ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு இந்த கனிமங்கள் மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாகும்.
இந்த புளிப்பு சுவை கொண்ட கருப்பு உப்பு சேர்க்கப்பட்ட எழும்சிச்சை நீர் செரிமான கோளாறுகளை நிர்வகிக்க உதவுகிறது. உங்கள் குடல் இயக்கம் மென்மையாகவும் சீராகவும் மாறுகிறது. நீங்கள் எந்த ஒரு அஜீரண கோளாறுகளாலும் பாதிக்கப்படுவதில்லை. இந்த மூலப்பொருட்கள் இரண்டுமே எடை இழப்பிற்கு உதவுகின்றன.
உங்கள் உட்புற செரிமான மண்டலம் சரியாக இயங்கவில்லை என்றால் உங்கள் உடலின் அதிக எடையை குறைப்பது கடினமாகிறது. இது தவிர, இந்த நீர் பருகுவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன.
இதனால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடை இழப்பு செயல்பாடு எளிதாகிறது.