திருமண ஆடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. வைரலாகும் வீடியோ
திருமணத்தின் போது தான் அணிந்திருந்த ஆடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா மாற்றியமைத்திருக்கின்றார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், திருமண பந்தத்தில் இணைந்த தற்போது விவாகரத்து செய்துக்கொண்டு தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமணத்தின் போது தான் அணிந்திருந்த அடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா மாற்றியமைத்திருக்கின்றார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண உடையை மாற்றுவது, தனது வாழ்க்கை முறையை மாற்றும் நடவடிக்கைகளில் ஒன்று என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் தனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்க்கைமுறையை முன்னெடுத்து, பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் சமந்தாவுக்கு Elle (India) மேகசின் ’ELLE Leaders of Change, Female’ என்ற விருதை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |